அக்க்ஷயதிருதி அன்று ஏன் நகை வாங்க வேண்டும் ??

Update: 2024-05-09 05:36 GMT

அக்க்ஷயதிருதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அக்க்ஷயதிருதியை இந்து சமயத்தவர் மற்றும் சமணர்களின் புனித நாளாகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வரும் அம்மாவாசையை அடுத்த மூன்றாம் நாட்களில் சுக்ல பட்சத்தில் வருகின்ற திருநாளாகும். அக்க்ஷய என்னும் சொல் சமஸ்கிருதம் மொழியில் எப்போதும் குறையாத வளம் கொண்டது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று எல்லோராலும் நம்பப்படுகிறது. இந்த நாள் இந்து சமய தெய்வங்களில் காக்கும் தெய்வமாக விளங்கும் விஷ்ணுவால் ஆளப்படுவதாகும் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான முனிவர் பரசுராமரின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்து சமய இதிகாசப்படி அக்க்ஷய திருதி தினத்தன்று வேதவியாசர் மகாபாரதம் என்னும் இதிகாசத்தை யானை முகத்தான் விநாயகரிடம் எழுத சொல்லி கட்டளையிட்டதும் இந்நாளில் தான். இந்திய கண்டத்தின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து இவ்வுலக மக்களுக்காக பூமிக்கும் கொடையாக தரப்பட்டது இந்நாளில் தான்.

குறிப்பாக மங்களப் பொருட்களான தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் நீண்ட கால சொத்துக்கலான வீடு மனைகள் போன்றவற்றை விரும்பி வாங்க உகந்த நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. மரபியல் ரீதியாக தொன்று தொட்டு வழிவந்தவர்கள் அக்க்ஷய திருதியை நாளில் தொடங்கப்படும் அனைத்து முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து வெற்றியை கொடுக்கும் என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.

எனவே புதிய வியாபாரத்தை தொடங்குவதும் கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அக்க்ஷய திருதி நாளில் செய்ய அனைவரும் விருப்பப்படுகின்றனர். வான இயல் சாஸ்திரப்படி இந்த நாளில் சூரியன் பகல் பொழுதில் எந்த அளவு பிரகாசத்துடன் தெரியுமோ அதே அளவு பிரகாச ஒளியுடன் இரவு பொழுதில் சந்திரன் ஜொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

வேத புத்தகங்களை இந்நாளில் கொடை அளித்தால் நல்ல பயன் அளிக்கும் எனக் கூறுகின்றனர். மேலும் சிறப்பான இந்த நாளில் தான் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் விஷ்ணுவின் மனைவியான லட்சுமிதேவியிடம் சென்று ஆசி பெறுவார். இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யாத்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. 

Tags:    

Similar News