வைகோ விரைவில் நலம் பெற வேண்டும்! - ராமதாஸ் அறிக்கை
எலும்பு முறிவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ விரைந்து நலம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-27 08:32 GMT
பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.