ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடி மோசடி!

Update: 2023-10-10 23:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், ஆன்லைன் தளங்களில் அதிக ஆஃபர்களில் எலக்டிரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்மார்ட் போன்கள் முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எதிர்பார்க்காத விலையில் இந்த பண்டிகை கால ஆஃபரில் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பணத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில் இந்த சமயத்தில் அதிக மோசடிகளும் அரங்கேற்றப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான போலிச் செய்திகளை அனுப்பி மோசடியாளர்கள், பணத்தை சுருட்டுகின்றன.

Advertisement

அவர்கள் வலையில் நீங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். பண்டிகை காலத்தில் வாட்ஸ்அப் மற்றும் இமெயில் வழியாக கவர்ச்சிகரமான ஆஃபர் செய்திகளைக் கொண்ட லிங்குகள் வருவதை பார்க்க முடியும். அந்த லிங்குகளை கிளிக் செய்தால் கூடுதல் தள்ளுபடி மற்றும் காஷ்பேக் ஆஃபர் கிடைக்கும் என கூறப்பட்டிருக்கும். ஆனால் இந்த லிங்குகளை நீங்கள் கண்டிப்பாக கிளிக் செய்யக்கூடாது. ஏனென்றால், பண்டிகை காலத்தில் அசல் தளத்தைப் போலவே மோசடி தளத்தை ஹேக்கர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் லிங்குகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவ விட்டு, மோசடியை அரங்கேற்றுகின்றனர். URL https:// என தொடங்கும் லிங்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

பொருளை ஆர்டர் செய்யும் முன்பு நீங்கள் சரியான வெப்சைட் தளத்தில் தான் இருக்கிறீர்களா இல்லையா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் ஓப்பன் செய்யும் வெப்சைட் அல்லது லிங்கில் Amazon என்பதற்கு பதிலாக Amaz0n என இருக்கலாம். 

இந்த பண்டிகை காலத்திலும் சரி மற்ற நேரங்களிலும் சரி ஆன்லைனில் பொருள் வாங்கி உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது என்றால் 24 மணி நேரத்திறகுள் சைபர் க்ரைமின் இலவச தொலை பேசி எண்ணான '1930' -க்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். உடனடியாக உங்கள் வங்கி கணக்கை தற்காலிகமாக முடக்கி வையுங்கள்.

Tags:    

Similar News