உஷாரு! அய்யா !உஷாரு! Firefox பிரவுசர் யூஸ்!அரசு கொடுத்திருக்கும் எச்சரிக்கை!
ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயனர்களுக்கு இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) உட்சபட்ச எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இப்போது இருக்கும் குறைபாடுகள் 124ஐ விட பழைய வெர்சன் Firefox பிரவுசர்களையும், 115.9 ஐ விட பழைய வெர்சன் Mozilla Thunderbird வெர்சன்களையும் பாதிக்கிறது.இந்த குறைபாடுகள் காரணமாக, ஹேக்கர்கள் ஒரு யூசரைபோலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்வதுடன், அவரது தகவல்களையும் பொறி வைத்து திருடுகின்றனர்.
இந்த ஆபத்துக்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
* நீங்கள் அட்டோமேடிக் அப்டேட்டுகளை இயக்க வேண்டும், இதனால் லேட்டஸ்ட் பாதுகாப்பு லிங்குகள் உங்கள் பிரவுசரில் தொடர்ந்து வருகின்றன.
* உங்கள் மொபைலில் ஒரு நல்ல வைரஸ் தடுப்பு மற்றும் மால்வேர் எதிர்ப்பு *மென்பொருளை நிறுவி அவற்றை எப்போதும் புதுப்பித்துக்கொள்ளவும்.
*ஆன்லைனில் உலாவும்போது கவனமாக இருங்கள். தகவலை உள்ளிடுவதற்கு முன், இணையதளம் உண்மையானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும்.
*நம்பகமான ஆதாரங்களில் இருந்து இணைய பாதுகாப்பு பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
*. ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயலை நீங்கள் கண்டால் அல்லது உங்கள் கணினியில் குறைபாடு இருப்பதாக நீங்கள் நம்பினால், உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது Cyber security response குழுவிற்கு தெரிவிக்கவும்.