வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் !!

Update: 2024-06-21 12:20 GMT

இன்பினிக்ஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இன்பினிக்ஸ் நிறுவனத்தின்அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆல்-ரவுண்ட் பாஸ்ட்சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர் லெஸ் மேக்னெடிக் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

Advertisement

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் டைட்டன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 26 ஆம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News