பிளிப்கார்ட் அறிவித்த அதிரடி சலுகை : ஐபோன் வாங்கணும் ஆசையா ? 18000 - இருந்தால் போதும் !!

Update: 2024-10-01 07:20 GMT

ஐபோன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பண்டிகைக் காலம் வந்தாலே வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை அனைத்து தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்நிலையில், நீங்கள் ஐபோன் கனவை நனவாக்க சரியான வாய்ப்பு இது தான். ஆப்பிள் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் போனுக்கு நல்ல சலுகையை பிளிப்கார்ட் வழங்குகிறது. இதனை நீங்கள் மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் 15, ஐபோன் 14 விலைகள் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகை விற்பனையில் ஐபோன் 14 (ப்ளூ, 128 ஜிபி) மாடலுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் வாங்க 14% தள்ளுபடி கிடைக்கும். இதனை பிளிப்கார்ட்டில் இதனை ரூ. 59,900க்கு வாங்கலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இந்த போனிற்கு கூடுதலாக ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும். EMI வசதியை பயன்படுத்தும் போது இந்த தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை ரூ.49,749க்கு வாங்கலாம்.

உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.30,950 வரை தள்ளுபடி பெறலாம். ஆனால் நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் போன் லேட்டஸ்ட்டானதாக இருக்க வேண்டும் என்பதோடு, நல்ல நிலையில் சேதமடையாமல் இருக்க வேண்டும்.

Tags:    

Similar News