அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல் கூடுதல் சலுகைகளை அறிவித்த ஏர்டெல் நிறுவனம் !!

Update: 2024-11-06 09:20 GMT

airtel

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை தற்போது அறிமுகம் செய்து வருகிறது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையோடு மட்டுமல்லாமல், வர்மபற்ற வாய்ஸ் கால்கள், தினம் 2.5 ஜிபி டேட்டா ஓடிடி சந்தாவும் ஆகியவற்றை கொடுக்கும் மலிவான திட்டம் ஒன்றை அந்நிறுவனம் (Airtel Prepaid Plans) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இணைய டேட்டா , அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் , ஓடிடி இலவச சந்தா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்தையும் பெறாலாம்.

Advertisement

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டணம் ரூ.3999. மாதம் வெறும் ரூ.333 கட்டணத்தில் கிடைக்கும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறலாம். ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அதி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இது தவிர நாளொன்றுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.

வரம்பற்ற 5ஜி டேட்டா இலவசமாக கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டமாக உள்ளது. இதற்கு ஏற்ப டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவை வருடம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த ஓடிடி சந்தாவின் மதிப்பு ரூ.499ஆக இருக்கிறது.

Tags:    

Similar News