விலையை உயர்த்திய ஏர்டெல் !!!
ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் சில சமயம் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏற்றி இறக்குவதும் வழக்கும். இந்நிலையிவ், இரண்டு பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஏர்டெல் நிறுவனம் அதிகரித்துள்ளது. 118 ரூபாயில் இருந்த ரீசார்ஜ் திட்டம் 129 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 11 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 289 ரூபாயில் இருந்த ரீசார்ஜ் திட்டம் தற்போது 329 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த பிளானில் 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏர்டெல் 329 ரூபாய் திட்டம்
இந்த பிளானின் வேலிட்டி 35 நாள்கள் ஆகும். இந்த பிளானில் பயனர்கள் வரம்பற்ற வாய்ஸ் காலிங், 300 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தமாக 4ஜிபி டேட்டாவை பெறுவார்கள்.
ஏர்டெல் 129 ரூபாய் திட்டம்
இந்த திட்டம் Data Add-on Voucher ஆகும். அதாவது அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் டேட்டா லிமிட் முடியும்போது கூடுதல் டேட்டாவுக்காக இந்த பிளானை ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். இந்த பிளானை பயன்படுத்த அடிப்படை பிளான் அவசியமாகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 12ஜிபி டேட்டா கிடைக்கும்.