ஏர்டெல் இரண்டாம் முறை ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டம் - அடுத்து எந்த மொபைல் நிறுவனகளுக்கு மாறலாம் என யோசிக்கும் மக்கள்!!

Update: 2024-10-29 11:00 GMT

ஏர்டெல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உயர்த்தினர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தன. இதனிடையே பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்ட நிலையில் இதனால் பலரும் பிஎஸ்என்எல்-க்கு மாற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த எந்த மொபைல் நிறுவனத்திற்கு மாறலாம் என யோசிக்க தொடங்கி உள்ளனர். ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News