கூகுள் பிளே ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட செயலிகள்!!!

Update: 2024-03-04 11:11 GMT

கூகுள் பிளே ஸ்டோர் 

மேட்ரிமோனி, டேட்டிங் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்ட் செயலிகளின் ஸ்டாரான, பிளே ஸ்டோரில் இருந்து 10க்கும் மேற்பட்ட செயலிகளை நேற்று நீக்கி உள்ளது. பிரபலமான மேட்ரிமோனி நிறுவனங்களின் செயலிகள், ஸ்ட்ரீமிங் செயலிகள், டேட்டிங் செயலிகள், வேலைவாய்ப்பு குறித்த செயலிகள் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது.

நீக்கப்பட்ட செயலிகள்:

தமிழ் மேட்ரிமோனி, தெலுங்கு மேட்ரிமோனி, மராத்தி மேட்ரிமோனி ,Shaadi.com, QuackQuack,Truly Madly,Aha, Alt Balaji , Stage , Kuku FM உள்ளிட்ட பாட்காஸ்ட் செயலியும் நீக்கப்பட்டுள்ளது . இவை மட்டுமின்றி, Nauri.com, Jeevsathi செயலி, 99 acres செயலி ஆகியவை நீக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கைகளுடன் இணங்காததால், இந்த செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மீண்டு வரும் செயலிகள்:

Shaadi.com செயலி மற்றும் Info Edge நிறுவனத்தின் சில செயலிகளும் தற்போது மீண்டும் பிளே ஸ்டோரில் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, Info Edge-இன் இணை நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனியும் X தளத்தில், "பல Info Edge செயலிகள் மீண்டும் பிளே ஸ்டோரில் வந்துள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் ஓபராய் மற்றும் நிறுவனத்தின் அனைத்து குழுவும் ஒரு சிறந்த பணியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News