5ஜி சேவைக்கான பரிசோதனையை தொடங்கிய BSNL - அச்சத்தில் ஜியோ, ஏர்டெல் !!!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும்.
BSNL நிறுவனம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் தனது 5G சேவைகளை விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என கூறப்படுகிறது. ஏனெனில், 5ஜி சேவை தொடங்குவதன் மூலம் தனியார் நிறுவனங்களை விட BSNL மலிவான கட்டணத்தில், அதி வேக இணைய சேவையை வழங்கும்.
தற்போது BSNL, சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு இடங்களில் 5G நெட்வொர்க்கை சோதிக்கத் தொடங்கியுள்ளது. லேகா வயர்லெஸ், கலூர் நெட்வொர்க்குகள், விவிடிஎன் டெக்னாலஜிஸ் மற்றும் வைசிக் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல், இணைந்து செயல்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு, பிஎஸ்என்எல் விரைவில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணையத்தை வழங்கும்.