கூகுள் மேப்ஸ் முலம் இந்த தகவலையும் தெரிஞ்சிக்கலாமா - புது அப்டேட் !!
கூகுள் மேப்ஸ் ஒரு வரைபடம் மட்டுமல்ல, பயணத்தின் போது பல தகவல்களை வழங்கும் மிகவும் பயனுள்ள செயலி. உங்கள் இருப்பிடத்தில் மட்டுமின்றி, புதிய நகரத்திற்கு சென்றாலும் உங்களுக்கு உதவக்கூடிய பல அம்சங்களை Google Maps கொண்டுள்ளது.
அனைத்து உலகமே பயன்படுத்தும் இந்த செயலி கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
கூகுள் மேப்பில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் விலாசத்தை குறிப்பிட்டால் போதும், இலக்கை அடைய நீங்கள் போக வேண்டிய தெளிவாக காட்டும். குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்வதற்கான எளிதான வழியை Google வரைபடம் உங்களுக்குச் சொல்லும்.
நீங்கள் பேருந்து, ரயில் அல்லது மெட்ரோவில் பயணிக்க விரும்பினால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பங்களையும் Google Maps காண்பிக்கும்.
கூகுள் மேப்ஸ் ட்ராஃபிக் அப்டேட்ஸ் தகவல்கள் மூலம் நீங்கள் போக்குவரத்து நெரிசல் எங்குள்ளது என்பது குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வதால் அந்த வழிகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
கூகுள் மேப்ஸில் நீங்கள் செல்லும் வழியில், போக்குவரத்து துறை சோதனைகள் மேற்கொள்ளும் பகுதிகள் குறித்த தகவலையும் கொடுக்கும். இதனால், அபராதம் விதிக்கப்படும் அபாயம் அதிக உள்ள சாலைகளைத் தவிர்க்கலாம். எச்சரிக்கையாகவும் செல்லலாம்.
வீதிக் காட்சி மூலம் நீங்கள் விரும்பிய பகுதியின் 360 டிகிரி காட்சியையும் பார்க்கலாம்.
நீங்கள் செல்லும் வழியில் உள்ள குறுகலான சாலைகள் குறித்த எச்சரிக்கையை கூகுள் உடனே வழங்கும். இதனால் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் வேறு வழியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
போக்குவர்த்து விதியில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட வேகமாக வாகனம் ஓட்டும்போது, கூகுள் மேப்ஸின் வேக எச்சரிக்கை அம்சம் உங்களை எச்சரிக்கும். இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய, Google Maps செயலியின் செட்டிங்ஸ் பிரிவுக்கு சென்று, வேக எச்சரிக்கையை ஆன் செய்யவும்.
Google வரைபடத்தில் அருகிலுள்ள உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் பார்களையும் நீங்கள் காணலாம்.கூகுள் மேப்ஸை ஆஃப்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் தொலைபேசியில் இணைய இணைப்பு இல்லாதபோதும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும் போது இந்த அம்சம் கை கொடுக்கும்.