BSNL நிறுவனம் வெளியிட்ட மலிவான ரீசார்ஜ் திட்டம் !!

Update: 2024-09-13 09:30 GMT

BSNL நிறுவனம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக பிஎஸ்என்எல் உருவாகி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில் அதன் மேம்பாட்டிற்காக பல திட்டங்களையும் வகுத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் பயனர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

BSNL நிறுவனம் 82 நாட்கள் செல்லுபடியாகும் மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கான கட்டணம் ரூ.485. இந்த திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா பலனைப் பெறுவார்கள். நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 123ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பின் நன்மையும் வழங்கப்படுகிறது. அதாவது அன்லிமிடெட் லோக்கல் கால் (Unlimited Local), எஸ்டிடி கால் (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறலாம். இது தவிர, பயனர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியையும் உள்ளது.

டேட்டா அதிகம் தேவை என்றால், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108 ஜிபி டேட்டா கிடைக்கும். தினமும் 2ஜிபி டேட்டா வசதியை கொடுக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் நிறுவனத்தின் Self Care செயலியில் பல ரீசார்ஜ் திட்டஙக்ள் பட்டியலிடப்பட்டுள்ளது. BSNL பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள BSNL Self Care செயலியை பதிவிறக்கவும். உங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி செயலியில் உள்நுழையவும். முகப்பு பக்கத்தில் பல பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான ஆப்ஷன்களை காணலாம்.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சிறந்த 4G,5G இணைப்பை வழங்க புதிதாக ஆயிரக்கணக்கான புதிய மொபைல் டவர்களும் நிறுவப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் பாதியில், இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவையைப் பெறும் வகையில் நெட்வொர்க் சேவை விரிவுபடுத்தப்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.

அரசு தொலைதொடர்புகளின் BSNL மற்றும் MTNL இன் 5G சேவையானது மேட் இன் இந்தியா நெட்வொர்க் கருவிகள் மூலம் விரைவில் முழுமையாக தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News