விரைவில் .... iPhone 16E !!

Update: 2025-01-03 10:55 GMT

iPhone 16E

iPhone SE 4/ iPhone 16E: பிரீமியம் வகை போன்களில் முதலிடம் வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் வைத்திருப்பது பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை உச்சத்தில் இருப்பதால் எல்லோராலும் வாங்க முடியும் நிலையில் இருப்பதில்லை. பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆப்பிளின் நான்காவது தலைமுறை iPhone SE, 2025 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த போன் iPhone 16E என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் போன் (Smart Phones), கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone SE 3 மாடலை விட சிறந்த அம்சங்களை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் SE 4 மாடல், ஆப்பிளின் மிகவும் மலிவு விலை போனாக இருக்கலாம்.

Tags:    

Similar News