நம்ம வீட்ல யூஸ் பண்ற ஃபிரிட்ஜ் எப்டி உருவானது தெரியுமா!

Update: 2024-05-20 11:03 GMT

ரெஃப்ரிஜிரேட்டர்

இப்போது இருக்கிற ரெஃப்ரிஜிரேட்டர் எந்திர அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு மக்கள் பனிக்கட்டிகள் மற்றும் பனித்துகள்களால் தங்கள் உணவுப் பொருள்களை குளிர்படுததி பாதுகாத்தனர். இதற்காக மலைப்பிரதேசங்களிலிருந்து பனிக்கட்டிகளைக் கொண்டு வந்தனர். நிலத்தில் குழி பறித்து வரிசையாக கட்டைகள் அல்லது குச்சிகளை அடுக்கி, அவற்றோடு பனிக்கட்டி மற்றும் பனித்துகள்களை சேர்த்து உணவுகளை பதப்படுத்தினர். இதுதான் பல காலமாக 'குளிர்பதனம்' (ரெஃப்ரிஜிரேஷன்) என்று அழைக்கப்பட்டு வந்தது.

அடைக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து அல்லது பொருட்களை வைத்துக்கொள்ளும் ஒரு பெரிய கலனில் இருந்து வெப்பத்தை நீக்கிவிட்டு குளிரச்செய்யும் செயல்தான் ரெப்ரிஜிரேஷன். முதல் ரெஃபரிஜிரேஷன் எந்திரம் அமைப்பு பற்றி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில், கி. பி. 1748-இல் மருத்துவரும் வேதியியல் நிபுணருமான 'வில்லியம் கியூலன்' என்பவரால் விளக்கப்பட்டது. ஆனாலும் வில்லியம் தனது எந்திரம் அமைக்கும் எண்ணத்தை எந்த செய்முறை நோக்கத்துக்காகவும் பயன்படுத்திப் பார்க்கவில்லை.

கி.பி. 1805-இல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் ஆலிவர் ஈவென்ஸ் என்பவர்தான் முதல் ரெஃப்ரிஜிரேஷன் எந்திரத்தை வடிவமைத்தார். ஆனாலும் நடைமுறைக்கு வந்த முதல் ரெஃப்ரிஜிரேட்டர் எந்திரம் ஜேக்கப் பெர்கின்ஸ் என்பவரால் 1834-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

அமெரிக்க மருத்துவர் ஜான் கோரி என்பவர், 1844- இல் ஆலிவர் ஈவென்ஸ் வடிவமைத்த எந்திரத்தின் அடிப்படையில் ஒரு ரெஃப்ரிஜிரேட்டரை உருவாக்கினார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தனது நோயாளிகளுக்கு குளிர் காற்றால் இன்பமான நிலையை அளிப்பதற்காகவே அந்த எந்திரத்தைச் செய்தார்.

மேம்படுத்தப்பட்ட ரெஃப்ரிஜிரேட்டர்கள் 1879-இல் தாமஸ் எல்கின்ஸ் என்ற ஆப்பிரிக்க கண்டுபிடிப்பாளராலும், 1891-இல் ஜான் ஸ்டாண்டர்டு என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளராலும் வடிவமைக்கப்பட்டன.

ஐஸ் பெட்டி

ரெஃப்ரிஜிரேட்டர் என்ற வார்த்தை 1800-ஆம் ஆண்டில் தாமஸ் மூர் என்ற எஞ்ஜினியரால் உருவாக்கி பயன்படுத்தப்பட்டது. இவர் அமெரிக்காவின் பழம் பெருமை வாய்ந்த மேரிலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். தாமஸ் மூரின் தயாரிப்பான பெட்டிதான் தற்போது ஐஸ் பெட்டி என்று அழைக்கப்படுகிறது.

மேரிலேண்டின் கிராமப் பகுதிகளிலிருந்து வாஷிங்டன் பெருநகரத்துக்கு வெண்ணையைக் கொண்டு செல்ல, ஐஸால் நிரப்பப்பட்ட இந்த ஷீட்மெட்டல் பெட்டி பயன்படுத்தப் பட்டது.

Tags:    

Similar News