கார்ட்டூன் எப்படி வந்துச்சு தெரியுமா?

Update: 2024-05-17 14:21 GMT

கார்ட்டூன்

பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள், கிண்டலான கருத்துப் படங்கள் (Cartoon) வரையும் முறை முதலில் இத்தாலியில் உள்ள பத்திரிகைகளில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு, உலக நாடுகள் முழுவதும் பரவி எல்லா நாட்டுப் பத்திரிகைகளிலும் 'கார்ட்டூன்' படங்கள் வரத் தொடங்கின. இங்கிலாந்தில் முதன்முதலாக கார்ட்டூன் படங்கள் மட்டுமே உள்ள பஞ்ச் என்னும் பத்திரிகை 1841-இல் தோன்றி மிகவும் புகழ் பெற்றது.

இந்தியாவில் முதன்முதலில் கார்ட்டூன் படங்களை பத்திரிகைகளில் வெளியிட்டவர். போத்தன் ஜோசப் என்பவர். தமிழ் பத்திரிகைகளில் பாரதியார், முதல் கேலிச்சித்திரங்களை ) வெளியிட்டார். டெல்லியிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸும், ஃப்ரீ ப்ரஸ் ஜர்னல் என்னும் பெயரில் வெளிவந்த பம்பாய் நகரப் பத்திரிகையும் கார்ட்டூன் படங்களை முதன்முதலாகவும் அதிகமாகவும் வெளியிட்டன.

பத்திரிகை ஆசிரியரின் தலையங்கத்துக்கு ஏற்ப நகைச்சுவையாக மனதில் படும்படியாக வரையப்படும் கார்ட்டூன் படங்கள்தாம் சிறப்பானவை. இந்தியாவில் ஆர்.கே. லட்சுமன் கார்ட்டூன் படங்கள் வரைவதில் மிகச் சிறந்தவர். உலக அளவில் சிறந்த கார்ட்டூன் படங்கள் வரைவதில் சிறந்தவர்கள் டேவிட் லோ என்பவரும் ஆனாரே டோமியோ என்பவரும் ஆவர்.

Tags:    

Similar News