ஸ்மார்ட்போனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிறதா?
ஃபோனின் பேட்டரி விரைவாக குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் இதற்கு காரணமாக அமைகின்றன. இதனால் போனின் ஆயுட்காலமும் சீக்கிரம் முடிந்துவிடுகிறது. ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் போடும் போது பேக் கேஸை கழட்டிவிட்டு சார்ஜ் போடுவது நல்லது. அந்த சமயத்தில் பேக் கேஸ் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கிறது. இதனால் பேட்டரி சேதமடைய வாய்ப்புள்ளது. சார்ஜ் போடும் போது பிளக்கை சரியான முறையில் கனெக்ட் செய்ய வேண்டும். இல்லை என்றால் பேட்டரிக்கு பவர் கூடுதலாகவோ அல்லது கம்மியாகவோ வந்தால் பேட்டரி பழுதாக வாய்ப்புள்ளது. இரவு முழுவதும் போனை சார்ஜ் போடும் பழக்கம் வைத்து இருந்தால் அதனை கைவிடுங்கள். முடிந்தவரை பேட்டரி 15-20 சதவிகிதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது நல்லது.70-80சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது பேட்டரியின் ஆயுட்காலத்தை குறைக்கும்.