திராட்சை ஜூஸ் குடிங்க..! இவ்ளோ நன்மைகள் இருக்கு!

Update: 2024-05-17 14:24 GMT

திராட்சை ஜூஸ்

தெம்பு குறைந்தவர்களுக்கு உடனடி சக்தி தரும் பானம் குடித்தவுடன் ஆனந்தம் தரும் ஜூஸ் - மலச்சிக்கல், வயிற்றுவலி அஜீரணம் விலகும் தொடர்ந்து சாப்பிட புற்றுநோய், தோல் பிணிகள், வெள்ளைத் தேமல் குறையும் உடலில் புது இரத்தம் உற்பத்தியாகி ஆற்றல் மிகும் ஒருவாரம் தொடர்ந்து திராட்சைச்சாறு மட்டும் அருந்தி வர உடல் கழிவுகள் வெளியேறி சகல பிணிகளும் விலகும். கல்லீரல் பிணிகளைச் சரி செய்யும். வருட கணக்கில் திராட்சை மட்டும் சாப்பிட்டு அற்புத ஆரோாக்கியத்துடன் வாழ்பவர்கள் உலகெங்கும் உள்ளனர். அதுபற்றி நிறைய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.

திராட்சை கேன்சரை குணப்படுத்தும் ஒரு அதிசய மருந் தாகவும் உள்ளது. கேன்சர் வரும் முன் காப்பதில் தடுப்புஊசி போல் கேன்சர் தடுப்பு அரணாகத் தினமும் ஒரு திராட்சை சாறு அருந்திப் பயன்பெறலாம். Mrs. ஜோஹன்னா பிரன்ட் என்ற பெண்மணி இளவயதில் புற்றுநோயால் பெரும் அவதியுற்று வெறும் திராட்சை சாறு மட்டும் அருந்தி குணம் அடைந்ததுடன் அதன் மகத்துவத்தை அதிசயத்தை, விந்தை செய்யும் மருத்துவத்தன்மையை "The Grape Cure" என்ற புத்தகம் மூலம் சுவைபட எளிய முறையில் விளக்கி யுள்ளார். வயிற்று உளைச்சல், வயிற்று வலி, பேதியாகுதல் அனைத்தையும் திராட்சைச்சாறு சரி செய்கின்றன

இதுபோல் பல பழச்சாறுகள் தயாரிக்கலாம் ஆப்பிள் சாறு டயரியாவை சரி செய்வதுடன் பல பிணிகளைக் குறைக்கிறது மாம்பழச்சாறு கண்களுக்கும் உடலுக்கும் தெம்பும் பலமும் தருகின்றன பப்பாளிச்சாறு இரத்தவிருத்தி செய்து ஸ்பைனல் கார்டு பிரச்சனை, வலியைக் குறைக்கிறது. தக்காளிச் சாறு உடல் வனப்பைக் கூட்டி, கூடுதல் எடை, ஒபேசிட்டி குறைக்கிறது. கொய்யாக் கனிச்சாறை நீரழிவு, மூலவியாதி அன்பர்கள் அருமை யாகச் சுவைக்கலாம். நாவல் பழச்சாறு நீரழிவு அன்பர்களின் அற்புத மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. தாயைப் போல் நமது வயிற்றை பாதுகாப்பது தினம் ஒரு மாதுளைச்சாறு மாதுளை காய்ச்சலைக் குணப்படுத்தும்.

Tags:    

Similar News