ஜியோசினிமாவின் புதிய திட்டம்...!

Update: 2024-04-25 11:38 GMT

ஜியோசினிமா

ஜியோசினிமா நிறுவனம் விளம்பரம் இல்லா சேவைக்கு புதிய சந்தா திட்டத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு வகையிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பாக, ஹாட்ஸ்டார் விளையாட்டு போட்டிகளை ஸ்ட்ரீம் செய்வதில் முன்னணியில் இருந்தது.

ஐபிஎல் ஓடிடி உரிமம்

ஹாட்ஸ்ஓடிடிடார் ஐபிஎல் தொடரை காண சந்தா வசூலித்து வந்த நிலையில், ஜியோசினிமா அந்த முறையை மாற்றி அடிப்படை வீடியோ குவாலிடியில் பார்க்க இலவச அணுகலை பார்வையாளர்களுக்கு வழங்கியது, தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தக்கவைத்திருந்தாலும், ஐபிஎல் தொடரை ஸ்ட்ரீம் செய்யும் ஓடிடி உரிமத்தை வரும் 2027ஆம் ஆண்டு வரை ஜியோசினிமா பெற்றிருக்கிறது. எனவே, ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை காண இலவச அணுகலை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறுவார்கள் என கூறப்பட்டது.

Tags:    

Similar News