இதோ வந்து விட்டது சாட் ஜிபிடி மொபைல் கூகுளை ஓவர் டெக் செய்யுமா?
ஆண்ட்ராய்டு மொபைல்களில் டீஃபால்ட் அசிஸ்டனாக சாட் ஜிபிடி செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது சாட் ஜிப் டி மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் உள்ளிட்டவை ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு சேவைகளான சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் உள்ளிட்டவை பழுதாக்கிவிட்டன. இது மனிதனின் அனைத்து தலைப்புகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தி வருகின்றன .இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் google assistant சேவைக்கு மாற்றாக சாட் ஜிபிடி சேவை விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உள்ள வெர்ஷனிலிருந்து இந்த செயலி ஆண்ட்ராய்டு சாதனத்தில் டிபால்ட் அசிஸ்டன்ட்டாக செட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பயணர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை எனபில் செய்து கொள்ளலாம். இது மற்ற செயலிகள் மேல் தோன்றும் வசதி உள்ளது. அந்த வகையில் பயனர்கள் எந்த ஸ்கிரீனில் இருந்து கொண்டும் சாட் ஜிபிடி உடன் பேச முடியும்..
தற்போது இந்த சேவையை பயன்படுத்த பிரத்தியேகமாக செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டிய நிலை உள்ளது இந்த சேவை டீபால்ட் ஆக வரும் பட்சத்தில் பயணர்கள் தனியாக எந்த செயலையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது...