ஆதார் கார்டு ஆன்லைனில் பெறுவது எப்படி?
ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அரசு சேவைகளைப் பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக ஆதார் கார்டு தேவைப்பட்டால், ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் எண் இருந்தால் போதும். இ-ஆதாரை UIDAI இணையதளம் அல்லது mAadhaar செயலியில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- UIDAI இணையதளத்திற்கு myaadhaar.uidai.gov.in/ செல்லவும்.
- 'ஆதாரைப் பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் 4 இலக்க OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
- OTP ஐ உள்ளிட்டு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் இ-ஆதார் PDF வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
இப்போது யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பிவிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம். யுஐடிஏஐ இணையதளத்திற்குச் சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி PVC ஆதார் அட்டையை ஆர்டர் செய்யலாம்.