சைபர் மோசடியில் இருந்து உங்கள் ஸ்மார்போனை பாதுகாக்க... சில முக்கிய வழிகள் !!!
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வந்த வண்ணம் உள்ளன.
ஹேக்கிங் செய்வதன் மூலம் சைபர் மோசடி நபர்கள், போன்கள் மற்றும் கணிணியில் இருந்து முக்கியமான தகவல்களைத் திருடி, மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
இதில் நமது புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்கள் என அனைத்தும் உள்ளன. ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டால், பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். ஹேக்கர்கள் போன் மூலம் தனிப்பட்ட தரவை அணுகுவதன் மூலம் சைபர் மோசடி செய்யலாம். நிமிடத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் காலியாகலாம். எனவே மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் சில செட்டிங்ஸ் வசதியை பயன்படுத்துவதன் மூலமும், சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், சைபர் தாக்குதல்களைத் தவிர்க்கலாம். தொலைபேசியின் பாதுகாப்பை அதிகரிக்கக்கூடிய அந்த அம்சங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்தல், வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்தவும், இரண்டு காரணி அங்கீகாரத்தை ஆக்டிவேட் செய்யவும், பாதுகாப்பற்ற மூலங்களில் இருந்து செயலிகளை நிறுவக் கூடாது.
பொது வைஃபை நெட்வொர்க்குகளின் மூலம் வங்கி தரவு அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை எளிதாக அணுக முடியும்.
எனவே, பொது இடங்களில் கொடுக்கப்படும் வைபையை பயன்படுத்துவதை தவிக்கவும். அப்படி பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் பொது வைஃபையை அணுகும்போது VPN ஐப் பயன்படுத்தவும்.