Infinix Smart 9 மொபைலை அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ் நிறுவனம் !!

Update: 2024-10-17 11:40 GMT

Infinix Smart 9 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்கள் அடங்கிய மொபைல்களை அறிமுகப்படுத்தி வாடிகையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது இன்ஃபினிக்ஸ் நிறுவனம். இந்த நிலையில் நிறுவனம் சமீபத்தில் Infinix Smart 9 என்ற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பட்ஜெட் மொபைல் சமீபத்தில் மலேசியாவில் அறிமுகமானது. இந்த புதிய மாடல் மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங் மற்றும் 48 மாத ஃப்ளுயன்ஸிக்கான TUV ரேட்டிங்கை கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸின் புதிய Smart 9 மொபைலானது மீடியா Mediatek Helio G81 ப்ராசஸருடன் வருகிறது.

இன்ஃபினிக்ஸின் ஸ்மார்ட் 9 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது Buy Now என்ற பட்டனை நாம் பார்த்தாலும், அது பர்ச்சேஸ் பேஜிற்கு ரீடைரக்ட் செய்யவில்லை. இதனிடையே மலேசியாவில் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 9-ன் பேஸ் 3GB/64GB வேரியன்ட் விலை MYR 299 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,300) என GSMArena வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News