உண்மையாக ஏலியன்கள் இருப்பதாக தகவல் - விரைவில் ஆதாரங்கள்
By : King 24x7 Angel
Update: 2024-10-14 08:40 GMT
ஏலியன்கள்
புத்திசாலியான வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளை பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் நாசாவுடன் தொடர்புடைய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட், பிபிசி மற்றும் நாசா நிதியுதவி திட்டங்களுக்கான ஆவணப்படங்களில் பணிபுரிந்தவர். இவர், ஏலியன்கள் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தில், வேற்று கிரக சிக்னல்களை தேடுவதாக குறிப்பிட்ட சைமன் ஹாலண்ட், "நமது விண்மீன் மண்டலத்தில் மனிதரல்லாத நுண்ணறிவை (ஏலியன்கள்)" அடையாளம் காண முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.