2025 ஆண்டில் போன் விலை அதிகரிக்கும் என தகவல் - போன் வாங்க திட்டமா இப்போவே வாங்கிடுங்க!

Update: 2024-11-15 07:18 GMT

 போன் விலை அதிகரிக்கும் என தகவல்

2025ஆம் ஆண்டில் செல்போன் விலை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.நடப்பாண்டிலேயே ஸ்மார்ட் போன்களின் விலை உயர்ந்த நிலையில், இனி வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிலும் போன்களின் விலை ரொம்ப உயர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் செல்போன் விலை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றன. இதனால், வரும் 2025ஆம் ஆண்டில், இப்போது இருப்பதை விட, போன் வாங்க அதிக செலவாகலாம் என கூறப்படுகிறது.

உலக மக்கள், தற்போது அதிக சக்தி வாய்ந்த ப்ராசசர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் அடங்கிய அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பலர், இந்த அம்சம் இருக்கும் போன்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இது, விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மார்க்கெட் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.

Tags:    

Similar News