ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 16 சீரிஸ் போன்கள் !!

Update: 2024-09-10 09:30 GMT

ஐபோன் 16 சீரிஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.

Tags:    

Similar News