பொது வெளியில் போன் - லாப்டாப் சார்ஜ் செய்வது நல்லதா ? கேட்டதா ...
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
நோட்புக்குகளில் பணியாற்றிய காலம் போய், இப்போது கம்ப்யூட்டரில் பணியாற்றும் காலம் தொடங்கிவிட்டது. மாணவர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் லேப்டாப் தேவை..இந்நிலையில் மொபைல் மற்றும் லேப்டாப் சீராக வேலை செய்ய, அதன் பேட்டரிகளை அவ்வப்போது சார்ஜ் செய்ய வேண்டும்.
பொது இடங்களில் சார்ஜ் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். பொது இடங்களில் சார்ஜ் செய்வதால், நமது தரவுகள் திருடப்படும் ஆபத்து உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம் சைபர் மோசடிக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம்.
பொது இடங்களில் சார்ஜ் செய்யும் போது, நமது சாதனம் பழுதாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ரயில்களில் இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்கள் குறைந்த வோல்டேஜ் கொண்டவை. எனவே அதில் சார்ஜ் செய்யும்போது, நீண்ட நேரம் எடுப்பதுடன், உங்கள் சாதனம் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது.
பொது இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.பயண நேரத்தின் போது பேட்டரி தீர்ந்து போகும் பிரச்சனையை தவிர்க்க, உங்களுடன் பவர் பேங்க் எடுத்துச் செல்வது நல்லது. இதன் மூலம் பொது இடங்களில் சார்ஜ் செய்யும் பிரச்சனையை தவிர்க்கலாம்.