ஓடும் ரயிலில் காலி சீட் இருக்கானு ஈஸியா பார்க்கணுமா..

ஓடும் ரயிலில் காலி சீட் இருக்கானு ஈஸியா பார்க்க வழிமுறைகள்.;

Update: 2024-01-30 09:19 GMT

ஓடும் ரயில் 

ரயில்வேயின் IRCTC தளம் என்பது உலகத்தரத்திலானது எனலாம்.டிக்கெட் பதிவில் இருந்து ரயில் குறித்த அனைத்து தகவல்களையும் தருகிறது. IRCTC செயலி மற்றும் இணையதளம் மூலம் தங்களின் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

நீங்கள் ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே ஒரு ரயிலில் இருக்கைகள் காலியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு அதை உறுதி செய்துகொள்ளலாம். அதாவது, ஓடும் ரயிலும் காலியாக உள்ள இருக்கைகளை நீங்கள் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.  இதற்காக நீங்கள் IRCTC செயலியில் லாக்-இன் வேண்டிய அவசியமில்லை.IRCTC செயலியில் 'Chart Vacancy' எனப்படும் மிகவும் பயனுள்ள அம்சம் உள்ளது. இந்த வசதியின் மூலம் ஓடும் ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களைப் பெறலாம்.

Advertisement

ஓடும் ரயிலில் காலி இருக்கைகளை பார்க்கும் வழிமுறைகள்:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் IRCTC செயலியைத் திறக்கவும்.

பிறகு Obviously தெரியும் 'Train' ஐகானைக் கிளிக் செய்யவும்.

Chart Vacancy என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு உங்கள் பெயரையும், நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலின் எண்ணையும் உள்ளிடவும்.

இப்போது நீங்கள் ரயில் ஏற விரும்பும் நிலையத்தை தேர்வு செய்யவும்.

பிறகு அந்த ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்கள் பெறலாம்

IRCTC செயிலியின் மூலம் இந்த 'Chart Vacancy' அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் அந்த செயலியில் லாக்-இன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

IRCTC இணையதளம் காலி இருக்கைகளை பார்க்கும் வழிமுறைகள்:

முதலில் IRCTC இணையதளத்தைத் திறக்கவும்.

பிறகு முகப்புப் பக்கத்தில், அடுத்துள்ள "Charts/Vacancy" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது "Reservation Chart" என்ற திரையில் தோன்றும்.

இப்போது தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, Get Train Chart என்பதைக் கிளிக் செய்யவும்.

இதன் பிறகு ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.

Tags:    

Similar News