புதிய பிளானில் ஜியோ - 5ஜி :பயனர்களுக்கு குட் நியூஸ் !!

Update: 2024-11-18 09:59 GMT

ஜியோ

ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 5ஜி வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஆச்சர்யமளிக்கும் வகையில், ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

5ஜி வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஆச்சர்யமளிக்கும் வகையில், ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 5ஜி இணைய சேவை உடன் பல்வேறு நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

இந்த புதிய ரீசார்ஜ் 999 ரூபாய்க்கு புதிய 5ஜி சேவையை ஜியோ தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. மொத்தம் 98 நாள்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் வருகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மூன்று மாதங்களுக்கு மேல் இந்த சேவையை பெறலாம். இதில் உங்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைத்தாலும், ஒருநாளுக்கு 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். 5ஜி இல்லாத இடங்களில் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொத்தம் 196ஜிபி டேட்டா இந்த பிளான் மூலம் உங்களுக்கு கிடைக்கும். இதுவும் போக வரம்பற்ற 5ஜி டேட்டா இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் 5ஜி சேவையை பெற உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அதிவேகமான 5ஜி டேட்டாவை பெறலாம்.

Tags:    

Similar News