ஜியோ... 50 நாள்களுக்கு இலவசம்!!

Update: 2024-04-01 10:05 GMT

ஜியோ

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள இந்த சீசனில் 50 நாள்கள் இலவச சேவையை ஜியோ ஏர்ஃபைபரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஏர்ஃபைபரை இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு கொண்டுசெல்லும் பொருட்டு இந்த 50 நாள் இலவச சேவையை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆப்பர் Jio True5G வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.வாடிக்கையாளர்கள் ரூ. 599 ரீசார்ஜ் திட்டங்கள் அல்லது 6 முதல் 12 மாதங்களுக்கு முன்பணம் செலுத்தப்படும் ஓடிடி திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த 50 நாள் இலவச தள்ளுபடி கிடைக்கும்.இந்த 50 நாள் இலவச தள்ளுபடி என்பது கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. ஜியோ ஏர்ஃபைபர் செயல்படுத்துவதற்கான கடைசி தேதி ஆக ஏப்ரல் 30ஆம் தேதி என ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News