ஜியோவின் 84 நாட்கள் பிளான் !!!

Update: 2024-03-08 10:35 GMT

ஜியோ

ஜியோ நிறுவனம் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. யூசர்கள் மொத்தமாக வெறும் 6ஜிபி டேட்டா மட்டுமே பெறுவார்கள். அதிக டேட்டா பயன்படுத்தாத தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும்.

வழக்கம்போல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சப்ஸ்கிரிப்சன்கள் கிடைக்கும். ஜியோ வாடிக்கையாளராக இருந்து 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருந்தால் உங்களுக்கு இந்த திட்டதிலும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும்.

ஜிபி டேட்டா முடிந்த பிறகு டேட்டா வேகம் 65kbps ஆக குறைந்துவிடும். அதேநேரத்தில் ஜியோ பிரீமியம் சப்ஸ்கிரிப்சன் இந்த திட்டத்தில் இல்லை. ஐபிஎல் தொடரை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களாக இருந்தால், இந்த திட்டத்தை தேர்வு செய்தால் தனியாக ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்சனை பெற வேண்டியிருக்கும்.

Tags:    

Similar News