மொபைல்கள்... அமேசானில் ரூ. 5 ஆயிரம் முதல்...!

Update: 2024-02-21 09:52 GMT

அமேசான் 

தற்போது சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரம் வரையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அமேசானில் தற்போது சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரம் வரையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

Redmi 13C :

Redmi 13C மொபைல் 8GB ரேம் மற்றும் 256GB சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Redmi 13C மாடலின் பின்புறத்தில் 50MP AI மூன்று கேமரா உள்ளது. இதிலும் 5,000mAh பேட்டரி உள்ளது. கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது.கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.74-இன்ச் HD+ 90Hz (Refesh Rate) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MediaTek Helio P85 பிராஸஸர் மூலம் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை 11 ஆயிரத்து 999 ரூபாயாகும். ஆனால் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது.

Redmi A2:

Redmi A2 மாடல் 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 5,000mAh பேட்டரி கிடைக்கிறது. 16.5CM HD+ டிஸ்ப்ளேவுடன் 400 nits உச்ச பிரகாசத்துடன் கிடைக்கிறது. இது MediaTek Helio G36 பிராஸஸர் மூலம் இயங்குகிறது.இதன் பின்புறம் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளது. கருப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த போன் விலை 9 ஆயிரத்து 999 ரூபாயாகும். ஆனால் 5 ஆயித்து 499 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது.

Realme Narzo 50i Prime:

Realme Narzo 50i Prime மொபைல் Unisoc T612 பிராஸஸர் மூலம் இயங்கும். இது 400 nits உடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் பின்புறம் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளது. இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்த மொபைல் 6 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

Samsung Galaxy M04:

சாம்சங்கின் இந்த கேலக்ஸி M04 மாடல் மொபைலானது, 720 x 1600 பிக்சல்கள் ரெசோல்யூஷன் கொண்ட 16.5CM HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Helio P35 பிராஸஸர் மூலம் இயங்குகிறது. இதன் பின்புறத்தில் 13MP + 2MP கேமரா இரட்டை கேமரா அமைப்பு உள்ளது முன்பக்கத்தில் 5MP கேமரா உள்ளது. இதில் 5,000mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் விலை 11 ஆயிரத்து 999 ரூபாய். ஆனால் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கு தற்போது அமேசானில் கிடைக்கிறது.

Tags:    

Similar News