ஒன்பிளஸ் !! முழு பணத்தையும் திரும்பி தரும் நிறுவனம்... !!
எங்கள் தயாரிப்பில் குறை இருப்பதாக நினைத்திருந்தால், போனை திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் ஒன்பிளச் 12ஆர் பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் UFS 4.0 ஸ்டாண்டேர்டு வெர்ஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிரத்யேக இணையதள பக்கத்திலும் இதே அம்சம்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால், அது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்பட்டது.ஒன்பிளஸ் கூறுவது என்னவென்றால், “தவறு நடந்துவிட்டது. அதனை தற்போது சரிசெய்து விட்டோம். ஆனால், இதை பார்த்து 12ஆர் மாடல் போனை வாங்கிய பயனர்களுக்கு ஏமாந்துவிட்டோம் என்ற வருத்தம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அருகில் உள்ள சேவை மையத்தை அணுகி முழு பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம்,” என்று நிறுவனத்தின் தலைவர் கிண்டெர் லியூ தெரிவித்துள்ளார்.ஒன்பிளச் 12ஆர் மொபைலின் 256ஜிபி வேரியண்டை வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதுவும் அவர்கள் மார்ச் 16, 2024 வரை மட்டுமே பணத்தைத் திரும்பப் பெற முடியும்.