டிஜிட்டல் உலகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி - எச்சரிக்கையாக இருக்க தில்லி போலீஸார் வலியுறுத்தல் !!!
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் டிஜிட்டல் உலகத்தில் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் பார்க்கிறோம். இந்நிலையில் தில்லி போலீஸார் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் மக்களை பல வழிகளில் ஏமாற்றி வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் இதில் பெரும்பலானவை UPI தொடர்பானவை. இந்த காலகட்டத்தில், 25,924 பேர் UPI தொடர்பான மோசடி தொடர்பான புகார்களை அளித்துள்ளனர் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. பணத்தை பறிக்கும் சைபர் மோசடி ஆசாமிகள் குறிப்பிட்ட சில டெக்னிக்குகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் என போலீஸார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சிலர் உங்களுக்கு பணம் அனுப்பியதாக போலியான ஸ்கிரீன்ஷாட்களை அனுப்பி, தான் தவறாக அணுப்பி விட்டதாகவும் அதனால் பணத்தை திரும்ப தருமாறும் கூறுவார்கள். அதற்காக டூப்ளிகேட் UPI QR குறியீட்டை அனுப்பி, உங்களிடம் பணம் கேட்பார்கள். போலி ஸ்கிரீன் ஷாட்களை நம்பாதீர்கள்.
டூப்ளிகேட் UPI QR குறியீட்டை அனுப்பி, மோசடியில் ஈடுபடுகிறார்கள். அவசரத்தில் பணம் தேவை என்று சொல்லி, டூப்ளிகேட் UPI QR குறியீட்டை அனுப்பி, உங்களிடம் பணம் கேட்பார்கள். உங்கள் UPI கணக்கில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படக்கூடிய ஆபத்தான பகுதிகளுக்கு இந்தக் குறியீடுகள் உங்களை அழைத்துச் செல்லும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் சரிபார்ப்பு இல்லாமல் பணம் அனுப்பாதீர்கள்.தெரியாதவர் அனுப்பும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
சில செயலிகள் அல்லது ஆப்ஸ் உங்கள் ஃபோன் திரையை கண்காணிக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் UPI பின் எண் மற்றும் OTP போன்ற முக்கியமான எண்களை திருடலாம்.உங்கள் UPI பின், OTP அல்லது பிற தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.
சிலர் போலி கோரிக்கைகளை அனுப்பி, தாங்கள் சிக்கலில் இருப்பதாகவும் உங்கள் உதவி தேவை அல்லது ஏதேனும் வங்கி சார்பாக செய்தி அனுப்புங்கள் என்று கேட்பார்கள். இதற்கான லிங்கை அனுப்பி தங்களுக்கு உதவுமாறு கேட்பார்கள். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். முன் பின் தெரியாதவரின் எந்த ஒரு கோரிக்கையை ஏற்க வேண்டாம்.
சைபர் கிரைம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்லி காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. UPI தொடர்பான பல மோசடிகள் நடைபெறுவதாக காவல்துறை அதனை தவிர்க்க, எச்சரிக்கையாக இருக்க வேண்டுகின்றனர்.