OPPO 256 ஜிபி ஸ்மார்ட்போன்!!!!

Update: 2024-04-09 11:23 GMT

OPPO 256 ஜிபி 

OPPO F25 Pro 5G லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் அனைத்து கலர் மொபைல்களையும் ஒரே விலையில் வாங்க முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.23,999 மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.25,999 ஆகும்.ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 2,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடிக்குப் பிறகு போனின் விலை ரூ.21,999 ஆக இருக்கும்.

OPPO F25 Pro!!!

OPPO F25 Pro 5G ஆனது 6.7 இன்ச் பெரிய திரையைக் கொண்டுள்ளது. இதன் வெளிச்சம் 1100 நிட்கள் ஆகும். இதில் MediaTek Dimensity 7050 என்ற செயலி உள்ளது, இது 8GB RAM மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது. OPPO F25 Pro 5G மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது - 64MP பிரதான கேமரா, 8MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் நெருக்கமான புகைப்படங்களுக்கான 2MP மேக்ரோ கேமரா. செல்ஃபிக்காக 32எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 67W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் பெரிய 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.இது தவிர Wi-Fi 6, GPS, Bluetooth 5.2 போன்ற விஷயங்களும் உள்ளன.

Tags:    

Similar News