ரயிலில் பயணம் !!! ஸ்விக்கியில் ஆர்டர் !!

Update: 2024-02-26 10:58 GMT

ரயிலில் பயணம் !!! ஸ்விக்கியில் ஆர்டர் !!

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி தற்போது இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இரயில்களில் பயணிகளுக்கு உணவை டெலிவரி செய்ய இணைந்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் இனி தங்களுக்கு தேவையான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம்.இந்த சேவையானது முதற்கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. “பண்ட்ல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் ஈகேடரிங் சேவை விரைவில் கிடைக்கக்கூடும்” என்று IRCTC தெரிவித்துள்ளது. ரயில் பயணத்தின் போது விருப்பமான உணவை பயணிகள் சாப்பிட, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.

எப்படி ஆர்டர் செய்வது?

*பயணிகள் தங்கள் பயணத்தில் என்ன உணவு வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர்களின் PNR எண்ணை உள்ளிட வேண்டும்.

*தங்களுக்கு தேவையான உணவை தேர்வு செய்தவுடன், ஆன்லைனில் பணம் அனுப்பலாம் அல்லது டெலிவரி செய்யும் போது பணத்தை கொடுக்கலாம்.

*ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பயணிகளின் இருக்கைகளுக்கு நேரடியாக கொண்டுவரப்படும்.

Tags:    

Similar News