ப்ரீபெய்டு பயனர்களுக்கான 5G upgrade voucher புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ !!
ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கான 5G upgrade voucher என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த "5G upgrade voucher" என்னும் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் ரூ. 601. தற்போது தகுதியான வரம்பற்ற 5G திட்டங்களைப் பயன்படுத்தாத பயனர்களுக்கும் வரம்பற்ற 5G சேவைகளை வழங்கும் இந்த திட்டம் குறிப்பாக, 1.5ஜிபி/நாள் அல்லது 2ஜிபி/மாதம் டேட்டா வழங்கும் தற்போதைய திட்டங்களுடன் இந்த வவுச்சரை பயனர்கள் இணைத்து, அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.
இணைய வசதி இல்லை என்றால், அனைத்து வேலையும் ஸ்தபித்துவிடும் என்ற நிலை உள்ள தற்போதைய காலகட்டத்தில், எவ்வளவு டேட்டா இருந்தாலும் போதாது என்ற நிலை உள்ளது. இந்நிலையில், குறைவான டேட்டா பேக்குகளை கொண்டவர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம், பயனுள்ளதாக இருக்கும்.
ஜியோவின், 5ஜி அப்கிரேட் வவுச்சரை நிறுவனத்தின் இணையதளம் அல்லது டெலிகாம் ஆபரேட்டரின் MyJio செயலி மூலம் வாங்கலாம். திட்டத்தை வாங்கும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களைப் பெறுவார்கள். இந்த தனிப்பட்ட டேட்டா வவுச்சர்கள் ஒவ்வொன்றும் ரூ51. என்ற கட்டணத்துடன் ஒரு மாதம் நீடிக்கும் வரம்பற்ற 5G டேட்டா வசதியை கொடுக்கும்.வரம்பற்ற 5G டேட்டா பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் 12 வவுச்சர்களை ரிடீம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பிறருக்கு பரிசாக கொடுக்கும் ஆப்ஷனும் உள்ளது.
இது தவிர, ஜியோ 5G இணைப்புக்கான அணுகலை வழங்கும் ரூ. 51, ரூ. 101, மற்றும் ரூ. 151 ஆகிய கட்டணங்களில் மூன்று 5G வவுச்சர்களும் உள்ளன. ஆர்வம் இல்லாதவர்கள், ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5G டேட்டாவுக்கான அணுகலை வழங்கும் 2GB/நாள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தையும் வாங்கலாம்.