சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3!! வெறும் ரூ.5000 தான்..

Update: 2024-03-05 10:20 GMT

சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3

ஆண்ட்ராய்டு வியர் இயங்குதளம் அடிப்படையிலான ஸ்மார்ட் வாட்சுகளைக் கொண்டிருந்த சாம்சங், தற்போது ஸ்மார்ட் பேண்டை குறைந்த விலைக்கு கொண்டு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஃபிட் 3 (Samsung Galaxy Fit3) என்று பெயரிடப்பட்டுள்ள

இந்த ஸ்மார்ட் பேண்டின் விலை வெறும் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெல்த் மானிட்டர், இதயத் துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, ஸ்போர்ட் மோடுகள் என பல அம்சங்கள் இந்த வாட்சில் நிறைந்துள்ளன.

புதிய ஸ்மார்ட் வாட்சில் 1.6 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே 256 x 402 பிக்சல் ரெசல்யூஷன் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஸ்மார்ட் வாட்சில் மிகவும் அவசியம் என்று எதிர்பார்க்கப்படும் 100 ஸ்போர்ட் மோடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஃபிட் 3 ஸ்மார்ட் வாட்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் 13 நாள்கள் வரை பேட்டரி தாக்குப்பிடிக்கும் என்று சாம்சங் தங்களின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக இதில் 208 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் உடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் 5.3 ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News