இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சாம்சங் நிறுவனம் !!

Update: 2024-09-28 06:10 GMT

 கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விலையை பொருத்தவரை கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 2400e பிராசஸர், 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏழு ஓஎஸ் அப்டேட்கள், ஏழு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் புளூ, கிராஃபைட் மற்றும் மின்ட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News