சாம்சங் நிறுவனம் இன்னும் சில தினங்களில் வெளியிடும் ஸ்மார்ட்போன் !!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வருகிற 23 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் கேலக்ஸி M55 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M55s மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, OIS,8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 7.8mm அளவில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இது கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் பின்புறம் பேட்டன் டிசைன் வழங்கப்படும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போனிலும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிமுகத்தை ஒட்டி அறிவிக்கப்படும்.