வாட்ஸ்-ஆப்பில் அதிர்ச்சியூட்டும் பெரிய மோசடி..திருமண பத்திரிகை வந்தால் Open பண்ணாதிங்க...
வாட்ஸ் ஆப் பயணாளர்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.இந்த டிஜிட்டல் யுகத்தில், போன் கால்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல விஷயங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. சமீப காலமாக, வாட்ஸ் ஆப்பில் நடைபெறும் நூதன மோசடி குறித்த விவரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மோசடி, தற்போது திருமண பத்திரிகை வடிவில் ஆரம்பித்திருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில், பலர் நேரில் சென்று யாருக்கும் பத்திரிகைகளை அனைவருக்கும் சென்று வைக்க நேரம் கிடைப்பதில்லை. அதனால் வாட்ஸ் ஆப்பிலேயே இன்விட்டேஷன்களை அனுப்பி விடுகின்றனர். இதே வடிவில்தான் தற்போது ஒரு மோசடி நடைப்பெற்று வருகிறது.
எப்படி கண்டறிவது?
முதலில் உங்கள் வாட்ஸ்-ஆப்பில் திருமண அழைப்பிதழ் வடிவில் ஒரு PDF அல்லது APK டாக்குமெண்டை அனுபுக்கின்றனர்.
அடுத்து அதை நீங்கள் திருமண அழைப்பிதழ் என நினைத்து டவுன்லோட் செய்வீர்கள்.
ஆனால், அது திருமண பத்திரிகையாகவே இருக்காது.
உங்கள் போனில் தீம்பொருளை (malware) பதிவிறக்கம் செய்து விடும்.
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஹேக்கர்கள் தொலைப்பேசி எண்கள், வங்கி கணக்கு குறித்த தகவல்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் திருடிக்கொள்ள அவர்களுக்கு Access கொடுக்கப்படுகிறது.
இப்படி மோசடியில் ஈடுபடுபவர்கள், உங்கள் contact-ல் இருப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஏதேனும் வெளிநாட்டு எண் அல்லது தெரியாத எண்ணில் இருந்துதான் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
அப்படி சந்தேகத்திற்குறிய எண்ணில் இருந்து திருமண அழைப்பிதழ் வடிவில் ஏதேனும் வந்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.