புத்தாண்டுக்கு புதிய மொபைல் வாங்க திட்டமிட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் !!

Update: 2024-11-13 09:50 GMT

 மொபைல்

இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜியும் மிக வேகமாக மாறி வருகிற நிலையில் ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் இன்றியமையாத அத்தியாவசிய பொருட்களின் இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது தகவல் தொடர்புக்கான சாதனம் என்ற நிலை மாறிவிட்டது. நமது அன்றாட பணி பலவும் ஸ்மார்ட்போனை சார்ந்தே உள்ளது.

புத்தாண்டில் புதிய மொபைல் போன் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு சிறு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கவுண்டர்பாயிண்ச் ரிசர்ச் என்னும் நிறுவனம் சந்தைக் கண்ணோட்ட அறிக்கையில், ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய சராசரி விற்பனை விலை 2024 ஆண்டில் 3 சதவீதமும், 2025 ஆண்டில் 5 சதவீதமும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேம்படுத்தப்பட்ட மாடல்கள், சிறந்த கேமரா சென்சார் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுவது உட்பட பல காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் போண்ற சில காரணங்களால், ஸ்மார்ட்போன் விலை 2025ம் ஆண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாலும், பட்ஜெட் பிரிவிலும் நிறுவனங்கள் உங்களுக்காக நல்ல ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தும் என்பது மக்களுக்கு ஆறுதல் தர கூடிய விஷயமாக இருக்கிறது.

விலை உயர்வுக்கு இரண்டாவது காரணம் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும். போன்களின் விலை உயர்வுக்கு மூன்றாவது காரணம் ஜெனரேட்டிவ் AI (Generative AI) என கவுண்டர்பாயிண்ச் ரிசர்ச் நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News