லேப்டாப் சார்ஜ் நிடித்து இருக்க வேண்டுமா ?? அப்போ இந்த டிப்ஸ் பலோ பண்ணுங்க !!
இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. ஆடம்பர பொருள் என்ற நிலையில் இருந்து அத்தியாவசிய பொருள் என்ற நிலைக்கு வந்து விட்ட கம்யூட்டரில், PC எனப்படும் டெஸ்க் டாப் வகை கம்ப்யூட்டரை விட லேப்டாப் அதிக அளவில் பயபடுத்தப்படுகிறது.
மடிக்கணினியின் பேட்டரி அதன் மிக முக்கியமான விஷயம். பேட்டரி நல்ல நிலையில் இருந்தால், தடையின்றி வேலை செய்யலாம். ஆனால் பல நேரங்களில் லேப்டாப் பேட்டரி மிக விரைவாக தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டு, நமது பணிகள் தடைபடும் சூழல் ஏற்படுகிறது.
குறிப்பாக நாம் நிறைய செயலிகள் மற்றும் வலைத்தளங்களை திறந்து பயன்படுத்தும் போது, லேப்டாப் பேட்டரி, சீக்கிரம் தீர்ந்து போகும் நிலை ஏற்படலாம். ஆனால் செட்டிங்ஸ் பிரிவில் சரியாக செட் செய்தால் நமது லேப்டாப்பின் பேட்டரி (Tech Tips) நீண்ட நேரம் நீடித்து இருக்கும்.
உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறனை மேம்படுத்த, "Power Efficiency Mode" பயன்முறையை ஆக்டிவேட் செய்யலாம். இதனால் காரணமாக பேட்டரி நீண்ட நேரம் தாக்கு பிடிக்கும். நீங்கள் நிறைய பயன்படுத்த வேண்டியிருக்கும் நிலையில் இந்த பயன்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
'ஆட்டோ எனர்ஜி சேவர்' பயன்படுத்தவும் (Auto Energy Saver) பேட்டரி 30% ஆக குறையும் போது, உங்கள் லேப்டாப்பை தானாக பேட்டரியை சேமிக்கும் வகையில் செட்டிங் அமைக்கலாம். இது உங்கள் லேப்டாப்பில் அழுத்தத்தை குறைக்கும் மற்றும் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்.
திரையை தானாக அணைப்பதன் மூலம் ஆற்றலைச் சேமிக்கவும் திரையை ஆட்டோ- ஆஃப் செய்வதன் மூலம் பேட்டரியை சேமிக்கலாம். இது உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறன் வீணாவதை தடுக்கும்.
ஸ்லீப் மோடிற்கு தானாகவே செல்லும் வகையில் செட்டிங்க்ஸில் மாற்றம் (close the lid to sleep) நீங்கள் மடிக்கணினியை மூடும்போது, அது தானாகவே தூக்க பயன்முறைக்கு செல்லும் வகையில் close the lid to sleep என செட்டிங்ஸ் அமைப்பதன் மூலம். உங்கள் மடிக்கணினியின் பேட்டரி திறன் வீணாவதை தடுக்கும்.