ஸ்மார்ட் போனின் பேட்டரி ஸ்மார்ட் ஆக இருக்க!
Update: 2023-10-13 09:29 GMT
ஸ்மார்ட் போனின் பேட்டரி நீண்ட நாட்களுக்கு உழைக்க இவற்றை பின்பற்றலாம் :
அதிக வெப்பம் அல்லது குளிரான சமயத்தில் தயவுசெய்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சார்ஜ் செய்யும் போது, உங்கள் போனின் பேக்கேஸை அகற்றிவிடுங்கள்.
பேட்டரி சதவிகிதம் 25-க்கு கீழ் குறைவாகவும் 80 க்கு மேல் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
பேட்டரியின் ஆயுளை மேம்படுத்த வேண்டும் என நினைத்தால், 5ஜி வேகத்தில் உங்கள் போனில் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாதீர்கள். பேட்டரியை சேமிக்க 4ஜி LTE வேகத்தில் இணையத்தை பயன்படுத்துங்கள்.
போனின் திரையை 60Hz மற்றும் குறைவான ரிசொலுஷனுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பயன்படுத்தாத ஆப்களை நீக்கவும்.
ஸ்மார்ட்போனை சமீபத்திய வெர்ஷனுக்கு சாப்ட்வேர் அப்பேட் செய்ய வேண்டும்.