ஸ்டேட்டஸ் அப்டேட் ஒரு நிமிடம் வாய்ஸ் நோட்ஸ் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாமா !!!

Update: 2024-06-07 10:40 GMT

ஸ்டேட்டஸ் அப்டேட்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீங்கள் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் அதே வழியில் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கான வாய்ஸ் நோட்ஸ் செயல்படுகிறது. மைக் பட்டனை அழுத்திக்கொண்டே உங்களுடைய வாய்ஸ் நோட்டை பதிவு செய்து ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகவும் வெளியிடலாம். மெசேஜ்களை டைப் செய்வதற்கான தேவையை அகற்றி சௌகரியத்தை அதிகரிக்கும் ஒரு அம்சமாக whatsapp வாய்ஸ் நோட்ஸ் அமைகிறது. பலருக்கு இந்த அம்சம் மிகவும் பிடித்தமானது ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் கூட இது பயனுள்ளதாக அமைகிறது. ஆனால் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளில் வாய்ஸ் நோட்ஸ் களை நீங்கள் 30 வினாடிகளுக்கு மட்டுமே அமைக்க முடியும் என்ற வரம்பை கொண்டு இருந்தது. ஆனால் தற்போது ஸ்டேட்டஸ் அப்டேடுகளாக நீங்கள் வைக்கும் வாய்ஸ் நோட்ஸ்களை ஒரு நிமிடம் வரை அமைப்பதற்கு வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

மெசேஜ் பாரில் காணப்படும் மைக் பட்டனை அழுத்தி நீங்கள் சொல்ல விரும்பும் மெசேஜை ரெக்கார்ட் செய்து அல்லது அப்டேட் செய்யும் பொழுது அது நேரடியாக உங்களுடைய அனைத்து காண்டாக்ட்களுக்கும் ஷேர் செய்யப்படும் என்பது இந்த அம்சத்தின் சிறந்த பகுதியாக அமைகிறது.நீங்கள் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் அதே வழியில் இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கான வாய்ஸ் நோட்ஸ் செயல்படுகிறது. மைக் பட்டனை அழுத்திக்கொண்டே உங்களுடைய வாய்ஸ் நோட்டை பதிவு செய்து, ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக வெளியிடலாம். நீங்கள் பதிவு செய்த கிளிப்பிங் ஆடியோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாரை ஸ்லைடு செய்து, வாய்ஸ் நோட் அப்லோட் ஆவதை கேன்சல் செய்துவிட்டு மீண்டும் ரெக்கார்ட் செய்யலாம். வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டாவில் சோதித்து வருகிறது. கூடிய விரைவில் இதன் அதிகாரப்பூர்வ பதிப்பை எதிர்பார்க்கலாம்.

அதேபோல வாட்ஸ்அப் யூசர்கள் தங்களுடைய டிஃபால்ட் தீம் கலரை மாற்றுவதற்கான அனுமதியையும் கூடிய விரைவில் பெறுவார்கள். இதற்கான சோதனை ஏற்கனவே iOS பதிப்பில் ஆரம்பித்துவிட்டது. சாட் தீம்களைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் ரெகுலர் மோடு மற்றும் டார்க் மோட் கொண்ட போனின் டீஃபால்ட் தீமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூடிய விரைவில் பல்வேறு நிறங்கள் கொண்ட தீம்களை இனி நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கான சமீபத்திய சோதனைகள் வாட்ஸ்அப் iOS 24.11.10.70 பீட்டா பதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. சாட் மற்றும் தீம் கலர்களுக்கு ஐந்து நிறங்கள் வரை வழங்க இருப்பதாக வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன் பரிந்துரை செய்துள்ளது.

Tags:    

Similar News