பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்க வழிமுறைகள் !!

Update: 2024-10-28 08:50 GMT

பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் பல மொபைல் சந்தாதாரர்கள் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.

எனினும், பிஎஸ்என்எல் நிறுவன சிம் பயன்படுத்துபவர்கள் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சனையை சந்திக்கின்றனர். இணையம் இல்லாமல் வாழ்க்கை முடங்கி விடும் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டோம். அன்றாட வாழ்க்கை தொடர்பான அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதால் சிரமமாக உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் பெரும்பாலும் 5ஜிக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பிஎஸ்என்எல் 4ஜிக்கும் இதனை பயன்படுத்தலாம். 2100 மெகா ஹெர்ட்ஸ் மூலம் கிடைக்கும் நெட்வொர்க் மிகவும் நன்றாக செயல்படவில்லை என கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்க, உங்கள் 5ஜி போனில் பிஎஸ்என்எல் சிம் கார்டைச் செருக வேண்டும். 5G ஃபோன்கள் 700 MHz அலைவரிசையைப் பயன்படுத்துகின்றன. இது 4G ஐ விட சிறந்தது. எனவே, இதன் மூலம் உங்கள் நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்கலாம்.உங்கள் தொலைபேசியின் செட்டிங் அமைப்புகளை சிறிது மாற்றுவதன் மூலம் 4G நெட்வொர்க்கின் வேகத்தை அதிகரிக்கலாம். உங்கள் தொலைபேசியின் அமைப்புகளுக்குச் சென்று "நெட்வொர்க் மற்றும் இணையம்" என்பதைக் கிளிக் செய்து "சிம் கார்டு" என்பதற்குச் சென்று பிஎஸ்என்எல் சிம்மைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, "5G / 4G / LTE" பயன்முறையைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் போனின் நெட்வொர்க் வேகத்தை அதிகரிக்கலாம்.

Tags:    

Similar News