வங்கி சலுகைகள் உடன் Flipkart-ல் ஐபோனுக்கு சூப்பர் ஆஃபர்!
ஐபோன் 16 சீரிஸ் மாடலானது அடுத்த மாதம், அதாவது செப்டம்பரில் அறிமுகமாக உள்ளது. இந்த ஐபோன் மாடல்களுக்காக நீங்கள் அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை. ஆனாலும் கூட ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், தற்போது தள்ளுபடியுடன் கிடைக்கும் முந்தைய ஜென் ஐபோனை நீங்கள் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வாங்கலாம். ஐபோன் 15 சீரிஸ் ஆனது தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த டிவைஸ் ஆகும், இந்த ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. நீங்கள் சரியான வங்கி கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.63,000க்கு வாங்கலாம்.
ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன், அதன் அசல் விலையான ரூ.79,900லிருந்து குறைந்து, தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.65,499 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி கார்டு இருந்தால், இதன் கீழ் செய்யப்படும் கார்ட்லெஸ் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1800 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் ஐபோன் 15 சீரிஸ் விலையை ரூ.63,699ஆக குறைக்க முடியும். மேலும், கார்ட்லெஸ் இஎம்ஐ பரிவர்த்தனைகளை தேர்வு செய்தால், ஸ்மார்ட்போனில் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியைப் பெறலாம். இந்த ஆஃபர் ஆனது ஐசிஐசிஐ வங்கி கார்டு யூசர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால் அதற்கு எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் மூலம் ரூ.55,000 வரை பெறலாம்.
ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ஆனது 60 Hz ரெஃபிரேஷ் ரெட் கொண்ட 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய ஐந்து வண்ணங்களில் வருகிறது. மேலும், டைனமிக் ஐலேண்ட் நாட்ச் கொண்ட 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உடன் டூயல் ரியர் கேமராவை கொண்டுள்ளது மற்றும் 12 மெகாபிக்சல் ஃபிரன்ட் கேமராவை கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 15 ஹெக்ஸா கோர் ஆப்பிள் ஏ16 பயோனிக் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இது 6ஜிபி ரேம் உடன் வருகிறது மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் iOS 17 மூலம் இயங்குகிறது மற்றும் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி ஆகிய இன்புல்டு ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இது தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் 171 கிராம் எடை உடையது. மேலும், 3349 mAh ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், Wi-Fi 802.11 b/g/n/ac/ax, GPS, ப்ளூடூத் v5.30, NFC, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.