விலையை அதிரடியாக குறைத்த டாடா!

Update: 2024-02-14 07:12 GMT

டாடா!

இரண்டு மாடல்களின் விலையை மட்டும் குறைத்து அறிவித்துள்ளது.டாடா நிறுவனம் அதன் Nexon மற்றும் Tiago ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் விலையை குறைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரையில் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான டாடா Punch EV காரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. Nexon, Tiago EV கார்களில் மட்டுமே விலைக்கு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு குறித்து டாடா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஒரு எலெக்ட்ரிக் காரின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரி செலவுகள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. சமீப காலங்களில் பேட்டரி செல்களின் விலைகள் குறைந்துள்ளதால், இன்னும் அதன் விலை வீழ்ச்சியடையும் என்பதையும் கருத்தில் கொண்டு, இதனால் வரும் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க நாங்கள் முடிவு செய்தோம்.

டாடா Tiago EV கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாத்தில் 8.49 லட்சம் ரூபாய் அறிமுக விலையில் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. டாடா Tiago EV காரில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. 24 kwh கெண்ட ஒரு பேட்டரி பேக்கில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கி.மீ., வரை முழுமயாக ஓடும். அதேபோல், 19.2 kWh கொண்ட மற்றொரு பேட்டரி பேக்கில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ., வரை ஓடும்.

இந்தியாவில் டாடாவின் இந்த விலை குறைப்புக்கு பின் Tiago EV கார் 7.99 லட்சம் ரூபாயில் தொடங்கும். Nexon EV 14.49 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது, நீண்ட தூர Nexon EV கார் 16.99 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. அதாவது Tiago கார் சுமார் ரூ.70 ஆயிரமும், Nexon EV சுமார் ரூ.1.20 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News