அந்த காலத்து துப்பாக்கி !
ஒரு கையால் பிடித்துக் கொண்டு சுடும் துப்பாக்கிகளே (Pistols) எனப்படும். குதிரைப்படையினர் சுமார் இரண்டடி நீளமுள்ள துப்பாக்கிகளை முதலில் பயன்படுத்தினார்கள். இத்துப்பாக்கிகளுக்கு குதிரைத் துப்பாக்கி (Horse-Pistol) என்று பெயர்.
இதற்குப் பிறகு, முதன்முதலாகக் கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் கார்மினெலியோ விட்டெலி என்பவர். இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1540- இல் இவர் அமைத்த கைத்துப்பாக்கி, பயன்படுத்த மிக எளிதாகவும் சிறியதாகவும் மிகவும் வசதியாகவும் இருந்தது. 1857-ஆம் ஆண்டு டேனியல் பெய்ர்டு வெசேன் என்பவர் தோட்டாவைக் கண்டுபிடித்தார். ஒரே நேரத்தில் பல குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பி தொடர்ந்து சுடக்கூடிய துப்பாக்கியை அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் கோல்ட் என்பவர் கண்டுபிடித்தார். இவரே 'Revolver' என்னும் சுழல் துப்பாக்கியையும் அமைத்தவர். தானாக இயங்கும் துப்பாக்கி 1898-இல் கண்டுபிடிக்கப்பட்டது