ஃபேக்ஸ் உருவான கதை !
உலகில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செய்திகளை எழுத்து மூலம் பரிமாறிக்கொள் வதற்கு கடிதங்களைப் பயன்படுத்து கிறோம். அதுவே நொடிப்பொழு தில் தெரிவிக்க வேண்டுமெனில் தொலைபேசியை உபயோகிக் கிறோம். அதுபோல, காகிதத் திலுள்ள செய்திகள், படங்கள் இவற்றை உள்ளது உள்ளபடியே நொடிப் பொழுதில் அனுப்ப ஃபேக்ஸைப் பயன்படுத்துகிறோம்.
ஃபேக்ஸ் என்பது என்ன? இதைக் கண்டுபிடித்தவர் யார்? எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
வரைபடம், புகைப்படம் இவற்றை மின் அல்லது ரேடியோ குறிப்பலைகளின் மூலம் அனுப்பி அதை மீண்டும் மற்றொரு பேப்பரில் பெற பயன்படும் கருவியே 'பேக்சிமிலி', இதை சுருக்கமாக 'ஃபேக்ஸ்' என்கிறோம். ஆர்தர் கான் என்ற ஜெர்மானியர்தான் நடைமுறைக்குப் பயன்படக்கூடிய ஃபேக்ஸை 1902-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1920-ஆம் ஆண்டு முதல் செய்தித் தாள்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு ஃபேக்ஸ் பயன்படத் தொடங்கியது. 1962-ஆம் ஆண்டு இந்தக் கருவி பிரபலமடைந்தது.
ஃபேக்ஸ் கருவி செய்தித்தாள், வியாபாரம் தொடர்பான தகவல்களை அனுப்ப மட்டுமின்றி காவல் துறையில் கைரேகைகள், புகைப்படங்கள் இவற்றை அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது.
முதன்முதலாகப் பயன்பாட்டிற்கு வந்த ஃபேக்ஸ் கருவிகள் A4 அளவு தாளிலுள்ள செய்திகள் அல்லது படங்கள் இவற்றை 6 நிமிடங்களில் அனுப்பின. அதன்பின்னர் வந்தவை 30 நொடிகளில் அனுப்பின. ஆனால் இப்போது வந்துள்ள பேக்ஸ் A4 அளவுத் தாளில் உள்ளவற்றை 4 நொடிகளில் அனுப்புகிறது.
பத்திரிகைத் துறைக்கு ஃபேக்ஸ் என்பது மிக முக்கியமான ஒன்றாகி விட்டது. செய்தித்தாள்களுக்கு செய்திகள் மற்றும் படங்களை விரைவாகத் தருவதற்கு ஃபேக்ஸின் பங்கு மிகமிக அவசியமாகிறது.